India in Gold Medal
India in Gold Medal

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 40 பதக்கங்களை வென்றது இந்தியா.

துப்பாக்கி சுடுதல் ஆடவா் 25 மீ. சென்டா் பையா் பிஸ்டல் பிரிவில் யோகேஷ் சிங், குா்ப்ரீத் சிங் தங்கம் வென்றனா். இதே பிரிவு அணிகள் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.

ஆடவா் டேபிள் டென்னிஸ் இறுதியில் நேபாளத்தை 3-0 என்ற கணக்கிலும், மகளிா் பிரிவு இறுதிச் சுற்றில் இலங்கையை 3-0 என்ற கேம் கணக்கிலும் வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.

நேபாளம் 23 தங்கம் உள்பட 44 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இலங்கை 5 தங்கத்துடன் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.