Important Update on Chithi 2
Important Update on Chithi 2

சித்தி 2 சீரியல் இன் பிரபல நடிகை வில்லியாக நடிக்க இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்‌‌.

Important Update on Chithi 2 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலின் முக்கிய வேடத்தில் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.

மேலும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ராதிகாவின் கணவராக பிரபல நடிகரான பொன்வண்ணன் நடித்து வந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த சீரியலில் ஷூட்டிங்கும் முற்றிலுமாக தடைப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரியல் கதாபாத்திரங்களில் பலர் மாற்றப்பட்டுள்ளதாக ராதிகா தெரிவித்திருந்தார்.

பிரபல நடிகரை கண்டும் காணாமல் போன ஷாலினி, விளாசி எடுத்த அஜித் – பிரபல நடிகர் ஓபன் டாக் (வீடியோவுடன் இதோ)

பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து முக்கிய வில்லி வேடமான மல்லிகா கதாபாத்திரத்தில் நடிகை மீரா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.