Idharkuthane Aasaipattai Balakumara 2
Idharkuthane Aasaipattai Balakumara 2

விஜய் சேதுபதி இல்லாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Idharkuthane Aasaipattai Balakumara 2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

மாஸ்டர் ரிலீஸ் குறித்து விஜய் அதிரடி கருத்து – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தை கோகுல் இயக்க சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார்.

தற்போது சித்தார்த் விபின் ஒரு பேட்டியில் இதற்குதானே பாலகுமாரா ஆசைப்பட்டாய் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவும் நான் சென்னை வந்ததும் இந்தப் பணிகளில் இணைவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி தற்போது பிஸியான நடிகர் ஆகிவிட்டார். அவர் படத்தில் நடிப்பாரா இல்லையா என்பதை இயக்குனர் தான் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறியதால் ரசிகர்கள் விஜய் சேதுபதி இல்லாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 திரைப்படம் உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

உருவாகிறது பிச்சைக்காரன் 2 – ஆனால் இந்த முறை படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

மார்ச் மாதமே வெளியாகவிருந்த இந்தப் படம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக தள்ளிப் போயுள்ளது. எப்படியும் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.