ICMR’s Shocking Report About Cancer  : இந்தியாவில் நடப்பாண்டு புற்றுநோய் பாதிப்பு 13.9 லட்சமாகவும், 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாகவும் அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR திடுக்கிடும் தகவலை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ICMR மற்றும் பெங்களூரை சேர்ந்த தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் 2020இல் 6.79 லட்சம் ஆண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே 2025 ஆம் ஆண்டில் 7.63 லட்சமாக அதிகரிக்கும். மேலும் 2020இல் 7.12 லட்சம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதே 2025 ஆம் ஆண்டில் 8.06 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புண்டு.

இதில் 2025ல் மார்பக புற்றுநோயால் 2.38 லட்சம் பெண்களும், அதற்கு அடுத்ததாக நுரையீரல் புற்றுநோயால் 1.11 லட்சம் பேரும், வாய் புற்றுநோயால் 900 பேரும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020இல் புகையிலை தொடர்பான புற்றுநோயால் 3.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த புற்றுநோய் பாதிப்பில் 27.1% சதவீதமாகும்.

நாட்டின் வடகிழக்கு பகுதியில் தான் அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரைப்பை குடல் மார்புப் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

புகையிலை பழக்கத்தால் நாட்டில் வடகிழக்கு பகுதியில் தான் அதிக ஆண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் நுரையீரல் வாய், வயிறு, குடல் புற்றுநோய் பாதிப்பு பொதுவாக காணப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.