Huma Qureshi Dance Video
Huma Qureshi Dance Video

இனி லாக் டவுன் இல்லை என என சொன்னதும் இப்படித்தான் நடனம் ஆடுவேன் என ஹீமா குரோஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Huma Qureshi Dance Video : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹீமா குரோஷி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து காலா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதால் அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர். ஹீமா குரோஷிக்கும் அதே நிலைமை தான்.

நம்மையே மறக்க வைக்கும் அழகிய குரல்.. பாட்டுப்பாடி லாக் டவுனை இனிமையாக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்கா – லேட்டஸ்ட் வீடியோவை பாருங்க!

லாக் டவுனில் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ஹீமா குரோஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இனி லாக் டவுன் இல்லை என்ற அறிவிப்பு வந்ததும் இப்படித்தான் ஆடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவர் தற்போது தமிழில் அஜித்துங ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இனி சிம்புவுக்கு கல்யாணம் ஆகுறது இவர் கையில் தான் இருக்கு – டி.ஆர் பேட்டி.!

படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இதுவும் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த லாக் டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.