House Owner Movie Review : Plus and Minus Of House Owner | Lakshmy Ramakrishnan | Kishore | Sri rajinini | Lovelyn ChandraSekar | House Owner Review
லட்சுமி ராமகிருஷ்னனின் இயக்கம் மற்றும் அவருடைய கணவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

House Owner Movie Review : தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவருடைய இயக்கத்தில் பசங்க கிஷோர், விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், ஆடுகளம் நரேன் மற்றும் ஸ்ரீ ரஞ்சினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர்.

படத்தின் கதைக்களம் :

இந்த படத்தில் இளம் வயது நாயகனாக கிஷோரும் ( பசங்க பட குழந்தை நட்சத்திரம் ) நாயகியாக லவ்லினும் நடித்துள்ளனர். முதுமை வயது தோற்றத்தில் கிஷோரும் ஸ்ரீ ரஞ்சனியும் நடித்துள்ளனர்.

பிராமண குடும்பத்தை சேர்ந்த கிஷோர் ஆர்மியில் பணி புரிகிறார். தன்னுடைய அப்பாவிற்கு தான் சொந்தமாக வீடு இல்லை என்பதால் தான் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை.

இவருக்கும் இவருடைய உறவினர் பெண்ணான லவ்வினுக்கும் திருமணம் நடைபெறுகிறது. எதற்கெடுத்தாலும் பயப்படும் லிவிற்கு இவர் தான் தைரியம் சொல்லுவார்.

வேலைக்கு சென்ற பிறகு சொந்த வீடு வாங்கி விடுகிறார். வயதான பிறகு இவர்கள் அந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். கிஷோர் ஒரு வித ஞாபக மறதி நோயால் அவதிப்படுபவர். அவர் தனக்கு 25 வயது தான் ஆகிறது என்ற நினைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.

தன்னுடன் இருப்பது தன் மனைவி என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார். அப்படியான கணவரை ஸ்ரீ ரஞ்சினி எப்படி சமாளிக்கிறார்? சென்னையில் பெருமழை பெய்து வெள்ளம் வேறு சூழ்ந்து விடுகிறது.

இப்படியான நிலையிலும் இந்த வீட்டை விட்டு வெளிவராத கணவரை ஸ்ரீ ரஞ்சினி எப்படி சமாளிக்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

கதை பழசு தான் ஆனால்? – சிந்து பாத் விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

இந்த படம் முழுக்க முழுக்க நான்கு பேரை சுற்றி தான் செல்லும். அந்த நால்வர் தான் பசங்க கிஷோர், லவ்லிங், ஆடுகளம் கிஷோர் மற்றும் ஸ்ரீ ரஞ்சினி.

இவர்களின் நான்கு பேரின் நடிப்பும் அற்புதமாக அமைந்துள்ளன. ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

ஸ்ரீ ரஞ்சினி நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்றால் அது இது தான் என 100% சொல்லலாம். அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் கிஷோரின் எதார்த்தமான நடிப்பு படத்தின் பலம். பசங்க கிஷோர் மற்றும் லவ்வினின் நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது.

படத்தின் இசை :

ஜிப்ரானின் இசை அற்புதம், மழை பெய்யும் பிண்ணனி இசையாமல் நம்மை மெய் மறக்க வைத்துள்ளார்.

ஒளிப்பதிவு :

கிருஷ்ண சேகர் என்பவர் இப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ளார். கொட்டும் மழையில் ஒளிப்பதிவு செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இருப்பினும் அப்படியான காட்சிகளை மிகவும் அழகாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்னன் அம்மணி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான படத்தை கொடுக்க முயன்றுள்ளார். அவருடைய முயற்சி 100-க்கு 80 % கை கொடுத்துள்ளது. ஒரு அழகான காதல் கதையை சென்னை பெரு மழையுடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது அற்புதம்.

ஆனால் கிளைமேக்ஸில் சரியான முடிவு இல்லையோ என்று பீல் வைத்து விட்டார் என்பது தான் குறை. அதே போல் படத்தின் டைட்டிலையும் வேறு எதையாவது வைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழுகிறது.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. இசை
3. ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
4. அழகான காதல் கதை

தம்ப்ஸ் டவுன் :

1. கிளைமேக்ஸ் காட்சியை சரியாக முடித்திருந்தால் ஹவுஸ் ஓனர் ஒரு சிறந்த படமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஹவுஸ் ஓனர் துளியும் ஆபாசம் இல்லாத உண்மையான அன்பை பேசும் படம்.

REVIEW OVERVIEW
ஹவுஸ் ஓனர் விமர்சனம்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
house-owner-movie-reviewமொத்தத்தில் ஹவுஸ் ஓனர் துளியும் ஆபாசம் இல்லாத உண்மையான அன்பை பேசும் படம்.