Hit Movies in Half-year Of 2020
Hit Movies in Half-year Of 2020

2020ன் முதல் பாதியில் அதிக வசூலைக் கொடுத்த படம், சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Hit Movies in Half-year Of 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று விடுவதில்லை.

இந்த 2020 ஆம் ஆண்டும் பல படங்கள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் படத்தின் ரிலீஸ் என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

கொரானா வைரஸ் தாக்குதலோடும் பல வேதனைகளுடனும் 2020 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில் இந்த ஆறு மாசத்தில் தமிழ் சினிமாவிற்கு நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

”நன்றி தல” திடீரென உருக்குமாக பேசிய சிவா; எதற்காக தெரியுமா?

அதிக வசூல் செய்த திரைப்படம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடம் பிடித்துள்ளது.

இப்படம் மொத்தமாக ரூபாய் 250 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஹிட்டான திரைப்படங்கள்

  1. பட்டாஸ்
  2. சைக்கோ
  3. ஓ மை கடவுளே
  4. நான் சிரித்தால்
  5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

பிளாக்பஸ்டர் :

வெறும் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய அளவில் வசூலை குவித்தது.