Hindi Language Issue
Hindi Language Issue

ஹிந்தி படிச்சா தப்பு ஒன்னு இல்ல என கூறி ட்வீட் செய்திருந்த காயத்ரி ரகுராமிற்கு பக்கா பதிலடி கொடுத்தார் காஜல்.

Hindi Language Issue : மத்திய அரசு ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என அறிக்கை விட்டது தமிழக மக்கள் முடியவே முடியாது என கூறி வருகின்றனர். தமிழக அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

கல் நெஞ்சக்காரி.. தங்கச்சி கேட்டும் சொல்ல மாட்டீங்களா? – தளபதி 63 தயாரிப்பாளரை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்.!

ஆனால் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் ஹிந்தி படித்தே ஆக வேண்டும், அதில் என்ன தவறு இருக்கிறது என பேசி வருகின்றனர். இந்நிலையில் காயத்ரி ரகுராமும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பிக் பாஸ் காஜல் பசுபதி பதிலடி கொடுக்கும் விதமாக டீவீட்டியுள்ளார். அந்த டீவீட்டில் தப்பு இல்ல ஸ்வீட்ட்டி வட நாட்டவர்கள் தமிழ் படிப்பதில்லை, ஆங்கிலமும் தெரியாது.

ஓ அந்த கட்சியா நீங்க? விவேகம் வில்லனால் சிக்கி கொண்ட காஜல் – புகைப்படத்தை பாருங்க.!

அவர்களை இதுவரை யாரும் எதுவும் கேட்டதில்லை. நாங்களும் கேட்டதில்லை. அப்படியிருக்க நாங்கள் மட்டும் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும் என கூறுகிறீர்கள் என டீவீட்டியுள்ளார்.

காஜலின் இந்த டீவீட்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.