High Court Verdict on Master Release

மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் தடை இருக்கிறது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

High Court Verdict on Master Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வாத்தி கம்மிங் சாங் வெளியாகி சமூக வலைதளங்களில் 100 மில்லியன் கடந்த நிலையில் வாத்தி ரைடு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை 400 இணையதளத்திலும் 9 கேபிள் டிவிகளிலும் சட்டவிரோதமாக திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் படக்குழு வழக்கு தொடர்நத நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.