பிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அதே சமயம் கே.பி செல்வாவிற்கும் ஒரு அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில்.
அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
இந்த அதிர்ச்சி தகவலை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கே.பி செல்வா பிகில் என்னுடைய கதை என தொடர்ந்திருந்த வழக்கில் நீதிமன்றம் பிகிலுக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ளது.
மேலும் கதை உங்களுடையது தான் என்ற ஆதாரங்கள் இருந்தால் காப்புரிமை தொடர்பாக நீங்கள் வழக்கு தொடரலாம் எனவும் செல்வாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பிகில் ஜெயிக்குமா? ஜெயிக்காதா? - பாலாஜி ஹாசன் கணிப்பு | Bigil Vs kaithi | Thalapathy Vijay | karthi
CUTE REACTION-க்கு பின்னாடி நடக்குறது எங்களுக்கு தான் தெரியும் - Exclusive Interview With Brigida


Watch this video on YouTube