சின்னத்திரை பிரபலமான நக்ஷத்திரா நடித்துள்ள ஹார்ட் பீட்டு என்ற ஆல்பம் பாடல் வீடியோ சமூக வளையதளங்களில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மூலமாக தொகுப்பாளினியாக பிரபலமானவர் நக்ஷத்ரா. இவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நக்ஷத்ரா ஹார்ட் பீட்டு என்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார். மனோரஞ்சன் என்பவர் இயக்க வினோத் ஏழுமலை மற்றும் ஷிஷ்யமோ ஆகியோர் இசையமைத்துள்ளனர். வினோத் ஏழுமலை பாடலையும் பாடியுள்ளார். நக்ஷத்திராவுக்கு ஜோடியாக ஆகாஷ் பிரேம் குமார் என்பவர் நடித்துள்ளார்.
Butterfly Appliances நிறுவனம் இந்த ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. வின்யா ஏழுமலை காஸ்டியூம் பணிகளை மேற்கொண்டுள்ளார். வாசன் சம்பத் ஒளிப்பதிவை கவனிக்க பிரிதிவ் பெரியசாமி எடிட்டிங் செய்துள்ளார்.
கேட்க கேட்க இனிக்கும் இப்பாடல் வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி பட்டய கிளப்பி வருகிறது. பார்வையாளர்கள் இந்த டீமிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.