Harish Kalyan Love With Priya

டுவிட்டரில் காதலை போட்டு உடைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண் இதனால் பிரியா பவானி சங்கர் கடுப்பாகி அதற்கு பதில் அளித்துள்ளார்.

Harish Kalyan Love With Priya Bhavani Shankar : தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் பிரியா பவானி சங்கருடன் ஜோடி சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனை பார்த்த பிரியா பவானி சங்கர் இந்த விஷயத்தை முதலில் நான் கூறலாம் என இருந்தேன் உன்னால் லாக் டவுன் முடியற வரைக்கும் பொறுமையாக இருக்க முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஹரிஷ் கல்யாண் என்னால் பொறுக்க முடியவில்லை இன்று ன மாலை (30.09.20) 5 மணிக்கு இது குறித்து அறிவிக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது ஒரு படம் பற்றிய அறிவிப்பு ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.