Friendship Movie

லாஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னீயே, உன் மனைவிக்கு தெரியுமா என பிரபல நடிகரை கோர்த்து விட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

Harbajan Singh Fun With Sathish : இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரராக விளையாடி வருபவர் ஹர்பஜன் சிங். இவர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் அர்ஜுன், சதீஷ் மற்றும் லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் லவ் யூ ஹர்பஜன்சிங் லவ் யூ லாஸ்லியா என தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த ஹர்பஜன் சிங் நீ லாஸ்லியாவை லவ் பண்றேன்ன்னு சொன்னியே மச்சி, இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு சதீஷ் எனக்கு இப்பதான் தெரியும் என பதில் அளித்துள்ளார். இவர்களில் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.