H Vinoth Review on Master

மாஸ்டர் படத்தைப் பார்த்த வலிமை பட இயக்குனர் கூறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

H Vinoth Review on Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் H வினோத். இவரது இயக்கத்திலும் தல அஜித் நடிப்பிலும் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை.

வலிமை படத்தின் இயக்குனரான வினோத் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு “தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து இந்த மாதிரியான சிறப்பான கதையை இயக்குவது என்பது சுலபமான விஷயம் கிடையாது.”என்று குறிப்பிட்டுள்ளார் வினோத்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.