Valimai Movie

வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எச் வினோத் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

H Vinoth in Valimai Shooting : தமிழ் சினிமாவில்சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தியை ஹீரோவாக வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்கினார்.

வட இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் வினோத்.

அதனைத் தொடர்ந்து தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தல அஜித்தின் வலிமை கெட்டப் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இயக்குனர் வினோத் வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

இதோ பாருங்க

https://twitter.com/ThalaAjith_Page/status/1354332073662705665?s=19
https://twitter.com/ThalaAjith_Page/status/1354343744275800067?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.