h.vinoth and Ajith
h.vinoth and Ajith

h.vinoth and Ajith :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதுவே தற்போது உறுதியாகிவிட்டது. அதேசமயம் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்துக்கும் வினோத்துக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் இதனால் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்திடம் இருந்து அஜித் பறித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லையாம். அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.