GVM Family Photo
GVM Family Photo

அச்சு அசலாக அப்படியே அப்பாவின் ஜெராக்ஸ் போல இருக்கிறார் கௌதம் மேனன்.

GVM Family Photo : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் தற்போது நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம்.

கர்நாடகாவின் TRP கிங்கான தல.. மாபெரும் சாதனை படைத்த விஸ்வாசம், எத்தனை லட்சம் பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா? – பிரபல நிறுவனம் வெளியிட்ட மெகா அப்டேட்!

இந்த படத்தில் சூர்யா அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அப்பா வேடம் கௌதம் மேனன் அப்படியே தன் அப்பாவை முன்னிறுத்தி உருவாக்கி உள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

கௌதம் மேனனும் அச்சு அசலாக அப்படியே தன் அப்பாவை ஜெராக்ஸ் எடுத்தது போல உள்ளார். இவர்களுடைய குடும்ப புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.