Gv Prakash Next Movie Director
Gv Prakash Next Movie Director

வெற்றிமாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Gv Prakash Next Movie Director : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன.

மன அழுத்தத்தில் தவித்த இயக்குனர், ஒரு மெசேஜில் மீள் வைத்த சாய் பல்லவி அப்படி என்ன நடந்தது தெரியுமா?

இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு வில்லனாக முன்னணி இயக்குனரும் தற்போது நடிகராகவும் பல படங்களில் கலக்கி வரும் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.