எதிர்பாராத நேரத்தில் வாடிவாசல் படத்தின் அப்படியே வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

Gv Prakash About Vadivasal Music : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படத்திற்கான இசைப் பணிகள் இன்று தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் பதிவைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.