தமிழகம் வெற்றி நடை போடுகிறது - ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு | Banwarilal Purohit | EPS

Governor Wishes to Edappadi K Palanisami : தமிழகத்திற்கான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று சென்னை சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் பேசிய போது முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கைள் காரணமாக இதுவரை இல்லாத அளவு நெல் உற்பத்தி அதிகரித்து இருப்பதாக கூறினார்.

கடுமையான சவாலாக்களுக்கு நடுவே தமிழகம் போராடி காவேரி மேலாண்மை வாரியம் உருவாக முதல்வர் காரணமாக இருந்ததாக கூறியுள்ளார்.

கடுமையான சவாலாக்களுக்கு நடுவே தமிழகம் போராடி காவேரி மேலாண்மை வாரியம் உருவாக முதல்வர் காரணமாக இருந்ததாக கூறியுள்ளார்.

Governor Wishes to Edappadi K Palanisamy

இதன் மூலமாக டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட காவிரி காப்பாளன் என்ற பட்டம் மிகவும் பொருத்தமான பட்டம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளால் விருதுகள் பெற்று வெற்றி நடை போடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் “அம்மா மினி கிளினிக்” தொடங்கியதற்கு முதலமைச்சருக்கு சிறப்பு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.