Government School Students :  Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Aadhaar number, Government School

Government School Students : 

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் எண் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் செல்லும் என்றும், எனினும் பள்ளி மாணவர் சேர்க்கை, வங்கிக் கணக்குகள், செல்போன் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வங்கி கணக்குகள், பான் அட்டை, பரஸ்பர நிதி முதலீடுகள், ஓய்வூதியம், செல்போன் சேவை, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு,

சமையல் கியாஸ் மானியம் போன்றவற்றிற்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆதார் எண் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்கக் கூடாது என்று ஆதார் எண்ணை வழங்கும்.

தனிப்பட்ட அடையாள ஆணையம் அனைத்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே கூறுகையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது.

வேண்டுமெனில் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பின்னர், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் என்று கூறினார்.

இந்நிலையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மாணவர்கள், பெற்றோரின் ஆதார் எண்ணை சேகரித்து EMIS-ல் பதிவு செய்யவும்,

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களிலேயே புதிய எண்ணை உருவாக்கி பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது”.

மேலும் 5 வயது முதல் 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை போன்றவை புதியதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,

தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.