தாக்க வரும் Nivar புயல்.. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?? | Cyclone | Tamil Nadu | EPS | News

Tamilnadu Goverment Actions For Nivar Cylone : நீராதாரமாக இருக்கக்கூடிய வடகிழக்கு பருவமழையானது துவங்கிய காலம் முதல் முதல்வர் மற்றும் இந்திய ஆட்சி பணியாளர்கள் அறிவுரையின்படி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோரணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளது.

2 தேசிய பேரிடர் மீட்பு படை சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.

நிவர் புயல், கன மழை, அதீத மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஏரிகள், நீர் நிலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்வாய்களில் அடைப்பு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.