Gold Marketing Status in India : நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 70% சரிவை சந்தித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 11% குறைந்து 1,015.7 டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில் 2019ல் உலக அளவில் தங்கத்தின் தேவை 1,136.9 டன்னாக அதிகரித்திருந்தது.

வித்தியாசமான முறையில் ரசிகர்கள் ஏமாற்றிய யுவராஜ் சிங்

இருப்பினும் சர்வதேச அளவில் முதலீட்டு நோக்கத்தில் ஆன தங்கத்திற்கான தேவை கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டில் இப்பிரிவில் ஆன தங்கத்தின் தேவை வெறும் 295 டன்னாக காணப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 98% உயர்வு கண்டு 582.9 டன்னாக எட்டியது.

கொரோன பொதுமுடக்கத்தில் சில நகரங்களில் தளர்வு ஏற்பட்ட சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் முடங்கிக்கிடந்த தங்க ஈடிஎஃப் திட்டங்கள் மீண்டும் சுறுசுறுப்படைய வழிவகுத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.