Gayathri Raghuram Missed Vijay Movie

விஜய் படத்தில் கிடைத்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டதாக பிக்பாஸ் நடிகை ஒருவர் புலம்பியுள்ளார்.

Gayathri Raghuram Missed Vijay Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்காத நடிகைகளே இல்லை.

தளபதி விஜயின் நடிப்பை காட்டிலும் அவருடைய நடனத்திற்கு மிகவும் அதிகமான ரசிகர்கள் உண்டு எனக் கூறலாம். அதிலும் குறிப்பாக விஜய் நடனத்திற்கு பெயர்போன பாடலாக அமைந்தது தான் ஆள்தோட்ட பூபதி. இந்த பாடலில் விஜயுடன் இணைந்து சிம்ரன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். ‌‌‌‌‌

ஆனால் முதலில் இந்த பாடலில் நடனம் ஆடும் வாய்ப்பு நடிகையின் டான்ஸருமான காயத்ரி ரகுராமிற்கு தான் கிடைத்துள்ளது. ஆனால் காயத்ரி ரகுராம் அப்போது சில படங்களில் நாயகியாக நடித்து வந்ததால் ஒரு பாடலில் நடனமாட தயக்கம் காட்டி கொண்டு யோசித்து சொல்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகை சிம்ரன் இந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டதாக காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்