Gayathri Raghuram against Tamilisai Soundararajan
Gayathri Raghuram against Tamilisai Soundararajan

Gayathri Raghuram against Tamilisai Soundararajan – சென்னை: “தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி அடையும் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்”.

கடந்த வாரம் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய காயத்ரி ரகுராம் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டார்.

இதற்காக அவர் அபராதம் காட்டினார் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் காட்டு தீயாய் பரவியது.

இதையடுத்து, இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம் ‘நான் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை. மது குடித்ததாக வதந்தி பரப்புகிறார்கள். நான் தமிழக பாஜகவில் இருக்கிறேன்.

அதனால்தான் என் மீது இவ்வாறு அவதூறு செய்தி பரப்புகிறார்கள். பாஜகவில் இருப்பதால் என்னை பழிவாங்குகிறார்கள்’ என்று கூறினார்.

கடந்த சில நாட்களாகவே நடிகை காயத்ரி ரகுராமிற்க்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பெரிய போரே நடந்து வருகிறது. காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய விவாதம் ஆகி, தற்போது பாஜகவின் தலைவர் யார் என்பது வரை இந்த பிரச்சனை நடந்து வருகிறது.

இந்நிலையில் காயத்ரியின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, ” காயத்ரி ரகுராமுக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழக பாஜகவில் உறுப்பினாராகவும் இல்லை.

அவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்காக அவரே பாஜகவில் இருந்து விலகிவிட்டார் ” என்று கூறினார்.

தற்போது தமிழிசையின் இந்த பதிலுக்கு காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது, “நான் இன்னும் பாஜகவில்தான் இருக்கிறேன். தமிழக பாஜக தலைவருக்கு இது கூட தெரியவில்லை.

தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவிலிருந்து நீக்கினால்தான் தமிழக பாஜக வளர்ச்சி அடையும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.