மின்னலே படத்தில் முதலில் மாதவனுக்கு பதிலாக வேறொரு நடிகர் தான் நடிக்க இருந்ததாக கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மின்னலே. இந்த படத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் முதலில் மாதவனுக்கு பதிலாக அப்பாஸ் தான் நடிக்க இருந்தாராம். இந்த படத்திற்காக அப்பாஸும் இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இறுதியில் அப்பாஸால் மாதவன் வேடத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என கெளதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ப்ரோமோஷனுஷனுக்காக அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.