Gautam Vasudev Menon About Vijay

விஜய் என்னை பார்த்து பயப்படுகிறார்கள் நான் ஒன்றும் திமிர் பிடித்தவன் அல்ல என கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Gautam Vasudev Menon About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தல அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவருடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தனி ஸ்டைலில் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். வசூலில் பெரிய அளவில் சாதனைகள் படைக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெறும்.

ஆனால் இதுவரை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கவில்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பயப்படுகிறார்கள்.

என்னுடைய படங்கள் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனத்தை கொடுக்கும். என்னுடைய படங்களில் நடித்தால் அவர்களுடைய படங்களாக பேசமாட்டார்கள் கௌதம் வாசுதேவ் மேனன் படமாக பேசுவார்கள்.

ஆகையால் தான் என்னுடைய படங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் எனப் பேசியுள்ளார். மேலும் நான் படப்பிடிப்புகளில் நடிகர்களிடம் சத்தமாக கூட பேச மாட்டேன். பெரியதாக அவர்களைப் பாராட்ட மாட்டேன். அதற்காக நான் ஒன்றும் திமிர் பிடித்தவன் அல்ல எனவும் கௌதம் வாசுதேவ மேனன் பேசியுள்ளார்.