5 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கேப்ரெல்லா.

Gabriella Exit From Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் முடிவுக்கு வர உள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது யார் என்பதை அறிந்துகொள்ள ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பணப்பெட்டி ஒன்றை உள்ளே அனுப்பி இதை எடுத்துக் கொண்டு வெளியே செல்பவர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

பெரும்பாலும் ரம்யா பாண்டியன் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கேப்ரில்லா ரூபாய் 5 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அவருடைய இந்த சாமர்த்தியமான முடிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அர்ச்சனா, ரியோ, சோம், நிஷா ஆகியோர் தான் மிகவும் வருத்தப்பட்டனர்.

அர்ச்சனா நம்ம டீம்ல இருந்து எல்லாரும் இப்படி போயிட்டே இருக்காஙக நம்ப வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம் என கண் கலங்கினார்.