Vijay 65 Music Composer
தளபதி 65 படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் தளபதி 65 இயக்குனர் யார் என்பதாக தான் உள்ளது.

மேலும் சமீபத்தில் தளபதி 65 படத்தை சுதா கொங்கராவ் அல்லது பாண்டிராஜ் இயக்கவே வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று பரவிய நிலையில் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி தான் மீண்டும் அமைய உள்ளது. அதாவது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் தான் தளபதி 65 இயக்குனர் என கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உறுதியாக தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.