Former Union Minister Pon Radhakrishnan speaks to Rajinikanth
Former Union Minister Pon Radhakrishnan speaks to Rajinikanth

சென்னை: போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” சிறப்பு விருது வழங்கப்படுவதற்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் தனது சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனப்படும் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். இதற்கு அவரது ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த திடீர் சந்திப்பு ஏன்(!?) என அரசியல் விமர்சகர்கள் பலவிதமான கருத்துகளை யூகித்து வந்த நிலையில் அவரே அதற்கான விடையை தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “50 -வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் #IconOf_Golden_Jubilee விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.