Foreign Birds Enters in Vettangudi
Foreign Birds Enters in Vettangudi

Foreign Birds Enters in Vettangudi : திருப்பத்தூர் அருகே கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம்.

மீண்டும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் அந்த பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்கு திரும்பி சென்று விடும்.

ஜல்லிக்கட்டு எதிரியான பீட்டா உடன் கைகோர்த்த காஜல் அகர்வால், கொரானா நிவாரண நிதிக்கு எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்ததால் சரணாலயம் அமைந்துள்ள கண்மாய் முழுவதும் பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சியளிப்பதால், பருவ காலத்திற்கு முன்பே உண்ணிக்கொக்கு, முக்குளிப்பான், சாம்பல் நிறநாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை, போன்ற வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகளின் கூட்டம் வரலாறு காணாத அளவில் வர தொடங்கியுள்ளது.