Forbes 2019 100 celebrities
அஜித்தை இயக்கியதால் சிவாவுக்கு கிடைத்தது விஜயை இயக்கிய அட்லீக்கு கிடைக்கல என்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சிறந்த பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை விடுவது வழக்கமான ஒன்று தான்.

இந்த வருடத்திற்கான ( 2019 ) பட்டியலில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் திரையுலகில் இருந்து மொத்தம் 9 பேர் போர்ப்ஸ் பத்திரிகையில் சிறந்த பிரபலங்களாக இடம் பிடித்துள்ளனர்.

இந்த 9 பேரில் ரஜினி, விஜய், அஜித், கமல், தனுஷ் என மொத்தம் 5 நடிகர்களும் ஷங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ் என மூன்று இயக்குனர்களும் இசை கலைஞர்களில் ரஹ்மானும் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிகம் கோலோச்சும் நடிகராக விஜய் இடம் பிடித்திருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அஜித்தை இயக்கிய சிறுத்தை சிவாவுக்கு போர்ப்ஸ் பத்திரிகையில் 80-வது இடமும் ரஜினியை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு 84-வது இடமும் கிடைத்துள்ளது.

விஜயை இயக்கிய அட்லீக்கு இந்த லிஸ்டில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் ஒன்றாக தான் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.