Flight Accident in Kerala : கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மீட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது.

190 பயணிகளுடன் துபாயில் இருந்து கோழிக்கோடு விமானம் நிலையம் வந்த போயிங் 737 விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஏற்பட்ட விபத்தில், விமானம் 2 துண்டுகளாக உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

காயமடைந்த 123 பேரில் 20 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியானது. கூடலூரை சேர்ந்த அந்த மூவரும் தற்போது நலமுடன் இருப்பதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்றைய கொரோனா பாதிப்பு, உச்சத்தைத் தொடும் உயிரிழப்பு – சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சிகர அறிக்கை

மோசமான வானிலை மற்றும், கோழிக்கோடு விமானநிலையத்தின் டேபிள் டாப் ரன்வே ஆகிய இந்த விபத்திற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், விபத்து தொடர்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் அதிகாரிகளுக்கும், விமானப் போக்குவரத்து இயக்குனருக்கும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மங்களூரு டேபிஸ் டாப் ரன்வேயில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு நடைபெற்ற இந்தியாவின் மோசமான விமான விபத்தாக கோழிக்கோடு விபத்து பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.