First Review About Valimai Movie

வலிமை படம் எப்படி இருக்கிறது என்று முதல்முறையாக படத்தை பார்த்து தெரிவித்துள்ளனர் படக்குழு.

First Review About Valimai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தினை இயக்குனர் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

அடுத்த வாரம் முதல் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது கல்வி படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை பார்த்துள்ளனர்.

படம் வேற லெவலில் வந்திருப்பதாகவும் இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆனால் வினோத்தின் சம்பளம் கோடிகளாக உயரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.