First Review About Soorarai Pottru
First Review About Soorarai Pottru

சூரரைப் போற்று படம் பார்த்து பிரபல தயாரிப்பாளர் மிரண்டுபோய் பாராட்டியுள்ளார்.

First Review About Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

திரையரங்குகள் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் வேறு வழி இல்லாமல் படக்குழு இந்தப் படத்தைப் அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 10ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த முக்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்னப்பா பொம்பள அவங்க.. அவங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்ன ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் 200 கோடி வசூல் எல்லாம் அசால்டாக எடுத்திருக்கும் அந்த அளவிற்கு படம் தரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் சூரரைப்போற்று படத்தை பார்த்து பிரமித்துப் போய் உள்ளனர்.

அந்த அளவிற்கு படம் தாறுமாறாக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப்போற்று நிச்சயம் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.