First Look Poster of Valimai

வலிமை படத்தின் போஸ்டர் ஒன்று திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

First Look Poster of Valimai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமைக்கு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது திரையரங்குகளில் வலிமை என்ற பெயரில் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுதானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இல்லை. அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.