போன முறை மிஸ் ஆகிடுச்சுஆனால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 5-ல் அஸூம் தான் மெயின் என்ட்ரி என தகவல் கிடைத்துள்ளது.
First Contestant in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த சீசனில் நடிகர் நகுல் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது முழுக்க முழுக்க வதந்தி என வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைய இருந்தவர் அசிம். ஆனால் சில காரணங்களால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. இப்படியான நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைய போவது அவர் தான் என தகவல் கிடைத்துள்ளது.
இது பிக் பாஸ் சீசன் ஐந்தில் இன்னும் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.