First Condition for Bigg Boss 4
First Condition for Bigg Boss 4

விரைவில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முதல் கண்டிஷன் தெரிய வந்துள்ளது.

First Condition for Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதுவரை இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.

எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி குரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போயிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணிகளில் குறைந்தது 400 தொழிலாளர்களாவது ஈடுபட வேண்டும் என்பதால் கொரானா தாக்கம் முழுமையாக முடிவடைந்த பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சீசன் நான்கையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என விஜய் டிவி உறுதி அளித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4-ன் தொகுப்பாளர் யார்?? எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு!

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகும் போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷனும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் நிச்சயம் அவர்கள் உள்ளே செல்வதற்கு முன்பாக கோவிட் 19 டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும் என்பது தான்.

கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னரே இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் அரசு சொல்லும் வழிமுறைகள் அத்தனையும் பின்பற்றி தான் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடக்கும் எனவும் உறுதி அளித்துள்ளது.