மருத்துவமனையில் இறந்த சிறுமிக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் அவனின் தந்தை உடலை கையில் தூக்கி சென்ற சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Father of dead daughter begging for ambulance – தெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனூறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்.

இவரின் 7 வயது மகள் கோமலாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. எனவே, கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.

அரிசியை வைத்து செல்வதை பெருக்கும் எளிய முறைகள் – நீங்களும் செய்து பாருங்க.!

ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தாள். எனவே தனது மகளை சொந்த கிராமத்திற்கு கொண்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் ஆம்புலன்ஸ் வசதியை கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.

எனவே, கண்ணீருடன் அவர் தனது மகளை கையில் ஏந்தியபடி வெளியே வந்தார். அதன்பின் அங்கிருந்த ஆட்டோ ஒட்டினர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், இரக்கமே இல்லாமல் அதிலும் சிலர் மறுத்துவிட்டனர்.

ஒரு ஆட்டோ ஒட்டுனர் மட்டும் அவரை அனுமதித்து தனது ஆட்டோவில் அவரின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை கண்கலங்க வைத்தது.

இத்தனைக்கும், தெலுங்கானா மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.