Fans Wishes to Bhakyalakshmi Gopi

சீரியலில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் நிஜ வாழ்கையில் அப்படி இல்லை என அவர் செய்த செயல் மூலம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளார்.

Fans Wishes to Bhakyalakshmi Gopi : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கதாபாத்திரம் அனைவரும் வெறுக்கும் ஒன்றாக உள்ளது. மக்களின் வெறுப்பு தான் இவருடைய நடிப்புக்கு கிடைத்த பெரும் பாராட்டு எனக் கூறலாம். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பளாஷ்பேக் கதையில் நடிக்கும் ஒரு சிறுவனுக்கு ஆறுதல் கூறினார். காரணம் அந்த சிறுவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் தன்னுடைய அம்மாவை இழந்துள்ளார். இதனையறிந்த சதீஷ் இந்தச் சிறுவனிடம் நீ என்னை அம்மா அப்பாவாக நினைத்துக் கொள் என கூறி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்மாவை இழந்த வலி எனக்குத் தெரியும் ஏனென்றால் நான் ஐந்து வயதில் இருக்கும்போதே என் பெற்றோரை இழந்தவன் என உருக்கமாக கூறியுள்ளார். இவருடைய இந்த செயலை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படி ஒரு மனசா என பாராட்டி வருகின்றனர்.