Fans Wishes to Balaji Murugadoss

பாலாஜி முருகதாஸ் பெயர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. பிறந்தநாள் தினத்தில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் அவரை எதிர்த்து கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Fans Wishes to Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் நான்காவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.

ஒவ்வொரு நாளும் வெளியாகும் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவிலும் பாலாஜி முருகதாஸ் நிச்சயம் இடம் பெற்றிருப்பதே இதற்கு காரணம். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் மற்றும் நெகட்டிவான விமர்சனம் என இரண்டும் இருந்து வருகிறது.

இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரிக்கும் இடையே நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து பாலாஜிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/BabeHarsh/status/1333815525076475904?s=20
https://twitter.com/NameisNareshh/status/1333819632092729344?s=20
https://twitter.com/Akash04901905/status/1333758407451365376?s=20
https://twitter.com/Akash04901905/status/1333758569586454528?s=20