Fans Support to Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை வெளியிட்டதை அடுத்து அவரைப் பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Fans Support to Rajinikanth : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சித்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறமிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்போ இல்லைனா எப்பவுமே இல்லை என தெரிவித்தார்.

டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில் இவர் நான் அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனால் பலரும் ரஜினியை மோசமாக விமர்சனம் செய்து வந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/srikanthkaran33/status/1344466643066310657?s=19
https://twitter.com/NVandhiyadhevan/status/1344440921169924096?s=19