விஜய் சேதுபதி

கமலுக்கு வில்லனாகுங்க என விஜய் சேதுபதி-க்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக விக்ரம் என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் கமலுக்கு வில்லனாக நடிக்கும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அதற்கு அடுத்ததாக பேட்டை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.