Fans Request to Sivakarthikeyan

உங்களை இப்படி பார்க்க வயித்தெறிச்சலா இருக்கு என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Fans Request to Sivakarthikeyan : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் லைகா மற்றும் இவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் டான் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய உடல் எடையை குறைத்திருந்தார். கை, கால்கள் மட்டும் மெலிந்து தலை பெரியதாக இருப்பது பார்க்கவே நன்றாக இல்லை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு ஓட்டுப் போட வந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இன்னும் அப்படியே இருப்பதை பார்த்து இது படத்துக்கான கெட்டப் தான் என்று புரிகிறது. ஆனால் இதை பார்க்க பார்க்க வைத்தெரிச்சலாக இருக்கு. விரைவில் உடல் எடை கூடி பழையபடி மாறுங்கள் அண்ணா என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.