Master Movie Update

ஒரே ஒரு சீன்ல நடித்ததற்குஇவ்வளவு அக்கப்போரா என மாஸ்டர் படம் நடிகரை ரசிகர்கள் சிலர் கலாய்த்து உள்ளனர்.

Fans Comment to Sanjeev Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஜேடியாக நடித்த விஜய் பூனைக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அந்தப் பூனையை தற்போது தன்னுடைய வீட்டில் தன்னுடைய மகளுக்காக வளர்த்து வருவதாக நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் ஒருசில சீன்களில் மட்டுமே நடித்த சஞ்சீவ் இவ்வாறு பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் ஒரே ஒரு சீன்ல நடித்துவிட்டு இவ்வளவு அக்கப்போரா என கிண்டல் அடித்துள்ளனர்.

அதேசமயம் தளபதி விஜய் ரசிகர்கள் பலர் படத்தில் விஜய் வளர்த்த பூனையை பாதுகாத்து வளர்த்து வருவதால் சஞ்சீவ்விற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/SanjeeveVenkat/status/1355405341123510274?s=19
https://twitter.com/chandru_hearts/status/1355416033222225925?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.