Fans Blast Archana Video

மகளுடன் அர்ச்சனா வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Fans Blast Archana Video : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா தன்னுடைய பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்துகொண்டார். அர்ச்சனா எதை செய்தாலும் தற்போது அவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் சேர்ந்து ஆல் அவுட் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்காக தன்னுடைய மகளுடன் சேர்ந்து விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுவும் ஃபேக் அன்பு தானா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.