Nayanthara
பிகில், விஸ்வாசம் என இரண்டு படத்திற்கும் நயன்தாரான பேவரைட் ஹீரோயின் என்ற விருதை வாங்கியுள்ளார். அப்படி இருந்தும் நெட்டிசன் ஒருவர் அவரை திட்டி தீர்த்துள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கடந்த வருடம் தல அஜித்துடன் விஸ்வாசம், தளபதி விஜயுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுக்காக இவருக்கு ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பேவரைட் நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நயன்தாரா பெயரில் வலம் வரும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் பலருக்கும் இதற்கு வாழ்த்து தெரிவிக்க சிலர் மட்டும் இவரை திட்டியுள்ளனர்.

படத்தின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மட்டும் வராதீங்க, விருது வாங்க மட்டும் வந்துடுங்க என விமர்சனம் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.