fake sub inspector
சென்னையில் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Fake sub inspector who married 7 girls – சென்னை எழும்பூரில் வசிக்கும் சீதா (24) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சீதா அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் பிரித்வி(29) சீதாவை கடத்தி சென்றது தெரியவந்தது. ராஜேஷின் சொந்த ஊரான திருப்பூரில் ஒரு வீட்டில் சீதாவை சிறைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் சீதாவை மீட்ட போலீசார், ராஜேஷையும் கைது செய்தனர்.

3வது திருமணத்திற்கு முயன்ற நபர் ; புரட்டி எடுத்த 2 மனைவிகள் : கோவையில் பரபரப்பு

அவரிடம் நடத்திய சோதனையில் 7ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் டாக்டர், பொறியாளர் எனக்கூறி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பேரில் ஒவ்வொரு பெண்ணை அவர் திருமணம் செய்து வந்தது தெரியவந்தது. இதுவரை மொத்தம் 6 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இவர் மீது திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திரா என பல ஊர்களில் வழக்கு உள்ளது.

கடைசியாக சென்னையில் தான் ஒரு சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி வலம் வந்துள்ளார். வேலையை ராஜினாமா செய்வதாக கூறி அமைந்தகரையில் போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு கால் செண்டரை துவங்கியுள்ளார். சுமார் 20 பெண்களின் கற்பை சூறையாடியுள்ளார். மேலும், மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

எனவே, அவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவோம் என போலீசார் கூறியுள்ளனர்.