Facial Doctor Warning to Raiza

மூன்று நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் என்ன அவை எச்சரித்து அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அழகு மருத்துவர்.

Facial Doctor Warning to Raiza : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரைசா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசியல் செய்வதற்காக மருத்துவமனை சென்று இருந்தார். அதன் பிறகு இவருடைய முகம் வீங்கி காணப்பட்டது. ஃபேஷியல் செய்ய போன பெண்ணை கட்டாயப்படுத்தி அழகு நிபுணர் தனக்கு புது வித பேசியல் செய்ததாகவும் இதனால் தனக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அந்த மருத்துவரிடம் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தற்போது பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ள மருத்துவர் அனைத்தும் தெரிந்து தான் ரைசா ஃபேஷியல் செய்து கொண்டார். தற்போது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு கூறி வருகிறார்.

ரைசா மூன்று நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவரின் நோட்டீசுக்கு ரைசா என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.