YouTube video

EPS Visit to Gudalur : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து சரியான நேரத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடலூர் பெருமளவு பாதிக்கப்பட்டது.

பொதுவாக புயல் பகுதியில் கரையை கடந்தால் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பெருமளவில் சேதம் அடையும். ஆனால் இம்முறை தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவிலான சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்காக பொதுமக்கள் பலரும் முதல்வர் பழனிச்சாமியின் நடவடிக்கைகளைப் பாராட்டி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் முதல்வர் கடலூர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். வயதான முதியவர்களிடம் சிரம் தாழ்த்தி முகாமில் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? உங்களுக்கு உணவு, மருந்து போன்றவை எல்லாம் கிடைத்ததா? என நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கடலூருக்கு நாளை விசிட் அடிக்கிறார் தமிழக முதல்வர். பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது எப்படி உள்ளன? அடுத்த கட்ட நடவடிக்கைகளாக என்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனையின் ஈடுபட உள்ளார்.

புயல் வேகத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருவது மக்கள் மத்தியில் அவருக்கு பாராட்டை பெற்று தருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.